உயிர்த்த ஞாயிறு வழக்கு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை விசாரணை மேற்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விசேட மேல் நீதிமன்றத்துக்கு தேவையான வசதிகளை துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

பொது நிர்வாக உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கு வழங்கி இருக்கும் உத்தியோகபூர்வ வாஸ்தலங்களில் நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகளை நேற்று விளாழக்கிழமை (12) கண்காணிக்கச்சென்ற, சந்தர்ப்பத்திலே இவ்வாறு அதிகாரிகளுக்கு ஆலாேசனை வழங்கியுள்ளார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,

ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்தில் (2025-2029) நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கு சாட்டப்பட்டுள்ள நடவடிக்கைகளை செயல்படுத்தி, வழக்கு நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக, முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய நான்கு உத்தியோகப்பூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் பிரகாரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு நடவடிக்கைகளை விசாரணை மேற்கொள்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் விசாரணை நடவடிக்கைகள் இலக்கம் சீ76 பெளத்தாலோக்க மாவத்தை கொழும்பு 7 என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சு உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும்.

அதற்கு தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் முன்னாள் அமைச்சர்களால் பயன்படுத்தப்பட்டு நீதிமன்றம் அமைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள ஏனைய உத்தியாேகபூர் வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகளை விரைவாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Posts