அமெரிக்காவில் எரிசக்தி மற்றும் பயன்படுத்தப்பட்ட சிற்றூந்துகளின் விலை குறைந்ததை அடுத்து, கடந்த மாதம் பணவீக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதாக அந்நாட்டு தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
ஜனவரி வரையிலான கடந்த 12 மாதங்களில் நுகர்வோர் விலைச் சுட்டெண் 2.4% ஆக உயர்ந்துள்ளது.
இது முந்தைய மாதத்தின் 2.7% உடன் ஒப்பிடுகையில் குறைவானதாகும்.
மேலும், கடந்த மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிகக் குறைந்த பணவீக்க உயர்வு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பணவீக்கம் குறைந்துள்ளதால், விலையேற்றம் குறித்த அச்சமின்றி மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்க முடியும் என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பலரின் வாதங்களுக்கு இது வலுசேர்த்துள்ளது.
பணவீக்கம் குறைந்திருந்தாலும், வரும் மாதங்களில் இது சவாலாக அமையலாம் என சில ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
நிறுவனங்கள் இறக்குமதி வரிகளின் சுமையை நுகர்வோர் மீது சுமத்தத் தொடங்கினால் விலை உயரலாம்.
தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக சேவைத் துறையில் விலையேற்றம் ஏற்படலாம்.
இருப்பினும், தற்போதைக்கு இறக்குமதி வரிகளினால் பெரிய பாதிப்புகள் ஏதும் தென்படவில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Font size:
Print
Related Posts
