ரொறன்ரோ பகுதியில் கப்பம் கோரல் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அலைபேசிகளுக்கு வன்முறையான படங்களை அனுப்பி அதன் மூலம் அச்சுறுத்தல் விடுத்து பணம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிலிருந்து தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் குறுஞ்செய்திகள் ஊடாக கப்பம் கோரப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவின் அணுக்கக் குறியெண் 470 மற்றும் 404 ஆகியனவற்றினை அடிப்படையாகக் கொண்ட எண்களிலிருந்து அழைப்பு எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோரப்படும் பணம் வழங்கப்படாவிட்டால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் என எச்சரிக்கை விடுத்து தகவல்கள் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான கப்பம் கோரல் அழைப்புக்கள் கிடைக்கப் பெற்றால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.