’’பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்’’

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


எரிபொருள் விலை திருத்தம் தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானங்களினால் பஸ் கட்டணத்தை குறைப்பது மக்களின் தொலைதூர கனவாக மாறியுள்ளதாக லங்கா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் (LPBOA) தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புதிய அரசாங்கத்தின் நிர்வாகத்தை தொடர்ந்து எரிபொருள் விலை குறையும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளதாக குறிப்பிட்டார்.

இந்த புத்தாண்டின் தொடக்கத்தில் எரிபொருள் விலை குறையும் என எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நம்பிக்கை தற்போது கனவாக மாறியுள்ளது.

“பஸ் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமானால், கொள்கை கணக்கீட்டின்படி டீசல் விலையை குறைந்தது ரூ.30 ஆல் குறைக்க வேண்டும்.

மேலும், எரிபொருள் விலை மட்டுமின்றி, உதிரி பாகங்கள் மற்றும் இதர உபகரணங்களின் விலையும் குறைய வேண்டும். தனியார் பஸ் சேவை தற்போது நெருக்கடியான நிலையில் உள்ளது. எனவே, இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பின், செலவுகளை நிர்வகிக்க பஸ் கட்டணத்தை கணிசமாக உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும்" என்றார்.

இதேவேளை, சாதாரண புத்தம் புதிய பஸ் ஒன்றின் விலை 16 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் அதன் பராமரிப்பு செலவுகளும் அதிகரித்துள்ளன. இது தவிர்க்க முடியாத பேருந்து கட்டண உயர்வுக்கு வழிவகுக்கும் என அவர் கூறினார். (P)

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு | Thedipaar News

Related Posts