ரொறன்ரோவில் ATM இயந்திரம் கொள்ளை: சம்பவத்தின் பின்னணி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பிராந்தியத்தில் வங்கியொன்றின் ATM இயந்திரம் தகர்க்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை அதிகாலை Bathurst Street மற்றும் Lawrence Avenue West பகுதியில் உள்ள TD வங்கி கட்டிடத்தின் மீது பேக்ஹோ மோதியதாகவும், ஏடிஎம் ஒன்று திருடப்பட்டதாகவும் கூறப்பட்டது. 

எவ்வளவு தொகை பணம் களவாடப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. எவ்வாறெனினும் வங்கிக் கட்டடத்திற்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக ரொறன்ரோ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் பற்றி தகவல் தெரிந்தவர்கள் 416-808-3200 என்ற எண்ணில் பொலிஸை தொடர்பு கொள்ளலாம்.

Related Posts