இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print




நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு உள்ளது. 

நேபாளத்தின் லொபுசே என்ற பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில் இதனை தொடர்ந்து, இந்தியாவின் புதுடில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் மற்றும் சீனாவிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.(P)

புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கு கிடைத்த டிஜிட்டல் வசதி | Thedipaar News

Related Posts