கலிபோர்னியா காட்டுத்தீ பேரிடராக அறிவிப்பு: அமெரிக்காவில் பதற்றம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்பட்ட காட்டுத்தீயால், பொதுமக்கள் பலரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வேறு இடங்களுக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டு உள்ளனர்.

காட்டுத்தீயால் புகை மண்டலம் பரவி காணப்படுகிறது. வெப்ப காற்றும் வீசி வருகிறது. இதனால், 30 ஆயிரம் கட்டிடங்கள் வரை பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது. இதுவரை காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில், இந்த காட்டுத்தீக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்கள் பலரின் வீடுகளும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.

லாஸ் ஏஞ்சல்ஸின் பல பகுதிகளிலும் காட்டுத்தீ விரைவாக பரவி வருகிறது. இந்த சூழலில், காட்டுத்தீயால் கலிபோர்னியாவில் பேரிடர் ஏற்பட்டு உள்ளது என பைடன் அறிவித்து உள்ளார். இதனை வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.

இதனால், காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மாகாணம், பழங்குடியின பகுதிகள் மற்றும் உள்ளூர் பகுதிகளில் மீட்பு முயற்சிகளை மேற்கொள்வதற்கான அரசின் உதவியை வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

Related Posts