திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு, 30+ காயம் - நடந்தது என்ன?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஆந்திராவின் திருப்பதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைகுண்ட துவார தரிசனத்துக்கான இலவச டோக்கன் விநியோகிக்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் அறிவித்திருந்தது.

புதன்கிழமை இரவு இலவச தரிசன டிக்கெட்டை பெற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவுண்டர்களில் திரண்டிருந்தனர். அப்போது விஷ்ணு நிவாசம், பைரகிபட்டேடா, ராமச்சந்திர புஷ்கரிணி உள்ளிட்ட கவுண்டர்களில் கூட்டம் அதிகம் இருந்தது. அந்த பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறையாக இல்லை என தகவல் கிடைத்துள்ளது. 

அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 30-க்கும் மேற்பட்டோருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்கள் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் தவித்துள்ளனர்

Related Posts