தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலரான லூர்து பிரான்சிஸ் என்பவர் மணல் கொள்ளையர்களால் கொ*லை செய்யப்பட்ட நிலையில், பல மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் என்பது நடைபெற்றது. இதன் காரணமாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது அரசு தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பெயரில் தற்போது தமிழக அரசின் பேரிடர் மற்றும் வருவாய் கூடுதல் ஆணையர் அமுதா கிராம நிர்வாக அதிகாரிகளின் மாநிலச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ஒரு பொதுத்துறை ஊழியரின் கடமையை செய்யவிடாமல் தடுப்பவர்கள் அல்லது அவர்களை கடமையிலிருந்து விலக்க முயற்சி செய்பவர்களுக்கு 2 வருடங்கள் வரை சிறை தண்டனை வழங்கப்படும். மேலும் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் அரசு ஊழியர்கள் சட்டப்படி முறையாக பாதுகாக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Font size:
Print
Related Posts