இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புல்வானா மாவட்டத்தில் பாண்ட்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா ஆகிய கிராமங்கள் இருக்கிறது. இந்த கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக ஒரு அரிய வகை மர்ம நோ*ய் பரவி வருகிறது. அதாவது திடீரென முடி அதிக அளவில் கொட்டி வழுக்கை ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஆண்கள், பெண்கள், முதியவர் மற்றும் சிறியவர் என அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.
முதலில் உச்சந்தலையில் சிறிது அரிப்பு ஏற்படுகிறது. பின்னர் முடி சொரசொரப்பாக மாறுகிறது. இதைத்தொடர்ந்து 72 மணி நேரத்தில் அவர்கள் முடி வழுக்கையாகும் வரை உதிர்கிறது. தலைமுடியில் வைத்தால் கூட கொத்து கொத்தாக உதிர்வதாக கூறியுள்ளனர். இந்த பிரச்சனை யால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறார்கள் . இந்த பாதிப்பால் ஒரு வாரத்தில் வழுக்கை ஏற்படுவதால் ஒட்டுமொத்த கிராம மக்களும் பீதியில் இருக்கிறார்கள்.
இரண்டு புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் சத்தியப்பிரமாணம் | Thedipaar News