அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து, அங்கு வசித்த 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர்.
குறிப்பாக, பலிசடேஸ், சைல்மர், ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 27 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்டுள்ள இந்த காட்டுத்தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சுமார் 1.30 லட்சம் பொதுமக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். 24 மணி நேர உதவி மையங்களும் இதற்காக செயல்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக கனடிய தீயணைப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். சுமார் 150 தீயணைப்பு படை வீரர்கள் அமெரிக்கா பயணிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒன்றாரியோ மாகாண தீயணைப்புபடையினர் இவ்வாறு அமெரிக்காவிற்கு செல்ல உள்ளனர்.
நெருங்கிய நட்பு நாட்டுக்கு உதவி தேவைப்படுவதாகவும் அதற்கு உதவி செய்ய வேண்டும் எனவும் ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் சுமார் 300 தீயணைப்பு படை வீரர்களை அனுப்பி வைக்க தயார் என போர்ட் தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸை விமர்சித்த ஜோ பைடன் | Thedipaar News