தமிழகத்தில் சாணக்கியன், சுமந்திரன், சிறீதரன்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் 'எத்திசையும் தமிழணங்கே' என்ற தலைப்பில் இடம்பெறும் உலக புலம்பெயர் தமிழர்கள் தின நிகழ்வில் தமிழக அரசின் அழைப்பின் பெயரில் கலந்துகொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், சிவஞானம் சிறீதரன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.

சென்னை சென்றுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் இந்திய பாராளுமன்றில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கனிமொழியைச் சந்தித்து இலங்கை தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் சம்பந்தமாகவும், மத்திய அரசில் தமிழ் நாட்டின் குரலை எமக்காகத் தொடர்ந்து எழுப்புவது சம்பந்தமாகவும் உரையாடினர்.

தமிழ்நாட்டில் இரு தினங்கள் இடம்பெறும் மாநாட்டில் பங்குகொண்டு எதிர்வரும் 13 ஆம் திகதி குறித்த மூவரும் நாடு திரும்பவுள்ளனர். (P)

திடீர் சுகயீனம் காரணமாக 50 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி | Thedipaar News

Related Posts