ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

மாவனல்லையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளரும்,கவிஞரும்,ஊடகவியலாளருமான ரிஸ்கி ஷெரீப் அவர்கள் தனது 54 ஆவது வயதில் 2025.01.10 ஆம் திகதி இரவு காலமானார். 

 லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார்.

 அதிலிருந்து விஷேட ஓய்வு பெறல் திட்டத்தின் கீழ் தினகரனில் இருந்து ஓய்வுபெற்ற ரிஸ்கி ஷெரீப் அவர்கள் ஹெம்மாதகம வீதியில் “புக் மார்ட்” எனும் பெயரில் புத்தக விற்பனை நிலையமொன்றை நடாத்தி வந்தார். சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த இவர் மொஹமட் பஸால்,பாத்திமா ஆதிலா,பாத்திமா அகீலா ஆகியோரின் அன்பு தந்தையும், பாத்திமா பஸ்லியாவின் கணவரும் ஆவார். 

 அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று சனிக்கிழமை கிருங்கதெனிய மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அநுர அரசு பதற்றம் அடையக்கூடாது! | Thedipaar News

Related Posts