Font size:
Print
Scarborough வடக்கு தொகுதியின் ஒன்ராறியோ NDP வேட்பாளராக தமிழரான தட்ஷா நவநீதன் நியமிக்கப்படவுள்ளார். இதன் மூலம் அடுத்த மாகாண சபை தேர்தலில் Ontario மாகாண புதிய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ் பெண் வேட்பாளர் தட்ஷா நவநீதன் போட்டியிடவுள்ளார்.
இதற்காக நடக்கும் நியமனக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக Ontario NDP தலைவர் Marit Stiles கலந்து கொள்கிறார்.
கடந்த வருடம் நடைபெற்ற Scarborough Guildwood தொகுதியின் ஒன்ராறியோ மாகாண சபை இடைத் தேர்தலில் தட்ஷா நவநீதன் போட்டியிட்டிருந்தார். இந்த இடைத் தேர்தலில் அவர் 4,041 வாக்குகளை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார்.
Related Posts