9 வயது சிறுமி மீது பாலியல் சேஷ்டை: 69 வயதானவர் கைது

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சிறுமியை பாலியல் சேஷ்டை செய்தமை தொடர்பில் சந்தேகத்தின்பேரில்   அதிர்ஷ்ட இலாப சீட்டு  விற்பனை செய்யும்   நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் கடந்த திங்கட்கிழமை (13) இவ்விடயம் குறித்து  சிறுமியின் தாயார் முறைப்பாடு ஒன்றை சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டிருந்தார்.

குறித்த முறைப்பாட்டிற்கு அதிர்ஷ்ட இலாப சீட்டு  விற்பனை செய்யும்   நபரை  பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்  வீரமுனை பகுதியில் வாடகை வீட்டில் தங்கி  அதிர்ஷ்ட இலாப சீட்டு (லொத்தர் டிக்கெட்)  விற்பனை செய்பவர் எனவும்  அம்பாறை  பகுதியை சேர்ந்தவர் என்பதும் முதற்கட்ட  விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

மேலும்  பாதிக்கப்பட்ட 9 வயது சிறுமி   மருத்துவ பரிசோதனைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கல்! | Thedipaar News

Related Posts