சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print


சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு  அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஒரு கிலோகிராம் சீமெந்து ஒரு ரூபாவால் குறைவதுடன், ஒரு மூட்டை சீமெந்தின் விலை சுமார் 100 ரூபாவால் குறைவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

ஏற்றுமதி அபிவிருத்திக்கு விதிக்கப்படும் செஸ் வரி மூலம் பெரும் வருமானத்தை நேரடியாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தம் என குழுவின் தலைவர், நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அத்துடன், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணத்தின் போது ஏற்பட்ட கருங்கல் ஏற்றுமதிக்காக விதிக்கப்பட்ட வரியை குறைப்பதற்கான முன்மொழிவுக்கும் குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. அதற்கமைய அந்தக் கருங்கல் ஒரு மில்லியன் மெட்ரிக் டொன் ஏற்றுமதிக்கு ஒரு கன மீட்டருக்கு 1000 ரூபாய் வரி அறவிடப்படும்.

இந்நிலையில், இவ்வாண்டு இறுதி வரை அஸ்வெசும பயனாளிகளுக்கு வழங்கப்படவேண்டிய நலன்புரி கொடுப்பனவுக்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது, மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15,000 ரூபாய் உதவித்தொகையை 17,500  ரூபாவாகவும், 8,500 ரூபாய் வழங்கும் குடும்பங்களுக்கு 10,000 ரூபாய் வழங்குவதற்கும், 2,500 ரூபாய் வழங்கும்  குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் வழங்குவதற்கும் மேலும் 5,000 ரூபாய் வழங்கும்  குடும்பங்களுகு அந்தத் தொகை மாறாமல் வழங்குவதற்கும் குழு அனுமதி வழங்கியது.  (P)

வலதுசாரிக் கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை! | SJB | Thedipaar News

Related Posts