டொராண்டோவின் மேற்குப் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெல்ஹாம் (Pelham) மற்றும் லாடன் (Laughton) அவென்யூ சந்திப்பில், ஒரு காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் இரத்த காயங்களுடன் அலறிக் கொண்டிருப்பதை வழிப்போக்கர்கள் கண்டு பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.
காரை ஓட்டிச் சென்ற நபர், அந்தப் பெண் அலறியும் நிறுத்தாமல் வேகமாகச் சென்றுள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்தக் கார் தப்பிச் சென்றுவிட்டது. விசாரணையின் அடிப்படையில், காரை ஓட்டியவர் டொராண்டோவைச் சேர்ந்த 47 வயதான ஜிம்மி மினானி (Jimmy Minani) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மீது தாக்குதல் (Assault) மற்றும் ஒருவரை வலுக்கட்டாயமாகச் சிறைபிடித்தல் (Forcible Confinement) ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்த நபர் அல்லது கார் குறித்துத் தகவல் தெரிந்தால் உடனடியாக 416-808-1100 என்ற எண்ணிற்கு அல்லது Crime Stoppers அமைப்பிற்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
