பாகிஸ்தானை சீண்டிய டீ கப் போஸ்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

T20 உலகக் கிண்ணத்தை வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அஹ்மதாபாத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி, மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை இந்திய அணி முத்தமிட்டது.

இந்த வெற்றிக்குப் பிறகு, வருண் சக்கரவர்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகக் கிண்ணத்தை ஒரு கையில் ஏந்தியபடி, மறு கையில் தேநீர் அருந்துவது போன்ற புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

2025 ஆசியக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்திய போது, சில காரணங்களால் இந்திய வீரர்கள் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்றுக்கொள்ளவில்லை.

அன்று கிண்ணத்துக்குப் பதிலாக ஒரு தேநீர் கோப்பையை அருகில் வைத்து வருண் எடுத்த புகைப்படம் பெரும் வைரலானது.

"கிண்ணம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், கிடைக்காததால் டீ கப்புடன் போஸ் கொடுத்தேன்" என அவர் அன்று கிண்டலாகக் கூறியிருந்தார்.

அன்று டீ கப்புடன் புகைப்படத்தைப் பகிர்ந்த வருண், இன்று உலகக் கிண்ணத்துடன் அதே பாணியில் புகைப்படத்தைப் பதிவிட்டது பாகிஸ்தான் இரசிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் வருண் முதலிடம் பிடித்தார்.

அதேவேளை, சில போட்டிகளில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தாலும், இக்கட்டான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு  சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி  முக்கிய காரணமாக அமைந்தார்.

Related Posts
©   Thedipaar

தல–தளபதி சந்திப்பு

©   Thedipaar

யாழில் கொடூர கொலை !