கனடாவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு நிம்மதி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடாவில் வங்கி கணக்கில் போதிய பணம் இல்லாதபோது வசூலிக்கப்படும் அபராதக் கட்டணத்தை (Non-Sufficient Funds - NSF fee) அதிகபட்சமாக 10 டாலராகக் குறைக்கும் புதிய கூட்டாட்சி விதிகள் இன்று முதல் (வியாழக்கிழமை) அமலுக்கு வந்துள்ளன.

இதுவரை வங்கிகள் ஒருமுறை போதிய பணம் இல்லாததற்கு 50 டாலர் வரை வசூலித்து வந்தன. இனிமேல் தனிநபர் டெபாசிட் கணக்குகளுக்கு இது அதிகபட்சம் 10 டாலர் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். 

ஒரே பரிவர்த்தனைக்காக இரண்டு வணிக நாட்களுக்குள் ஒருமுறைக்கு மேல் NSF கட்டணம் வசூலிப்பதை வங்கிகளுக்குப் புதிய விதிமுறை தடை செய்கிறது.

ஒருவரது கணக்கில் 10 டாலருக்கும் குறைவான பணப் பற்றாக்குறை இருந்தால், அதற்கு இனி அபராதக் கட்டணம் வசூலிக்கப்படாது.

இந்த மாற்றத்தின் மூலம் கனடியர்களுக்கு ஆண்டுக்கு சுமார் 600 மில்லியன் டாலர் வரை மிச்சமாகும் என அரசு தெரிவித்துள்ளது.

குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் வாடகைதாரர்கள், தங்கள் கணக்கில் சில காசுகள் குறைவாக இருந்தால்கூட அதிகப்படியான அபராதத்தைச் செலுத்த வேண்டியிருந்தது. இது அவர்களை மேலும் நிதி நெருக்கடியில் தள்ளுவதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் வகையிலேயே இந்த "மக்கள் நலன் சார்ந்த" நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

 

Related Posts