நுவரெலியா, ஹோட்டன் சமவெளி உலக முடிவு பகுதியில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி ஒருவர் தவறி விழுந்துள்ளதாக ஹோட்டன் சமவெளி 'உலக முடிவு' (World's End) சுற்றுலாத் தள மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்துள்ளார்.
உலக முடிவு பகுதியினை பார்வையிட வந்த பல்கலைக்கழக மாணவர் குழுவினர், நேற்று காலை சுமார் 9.00 மணியளவில் குறித்த பகுதிக்கு சென்றிருந்த நிலையில், செல்ஃபி எடுக்க முயன்றபோது மாணவி தவறி விழுந்துள்ளார்.
இதன்போது 50 அடி பள்ளத்தில் ஒரு மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த மாணவி பல மணிநேரப் போராட்டத்திற்கு பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தை கண்டு கொண்ட ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் சாரதி ஒருவர், தனது உயிர் ஆபத்தையும் பொருட்படுத்தாமல் கீழிறங்கி, கிளையில் தொங்கிக் கொண்டிருந்த மாணவியை மீட்டு அருகிலிருந்த பாறையில் அமர்த்தியுள்ளார். பின்னர் பட்டிப்பொல பொலிஸார், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவு இராணுவத்தினர், நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படை, வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸார் இணைந்து மேற்கொண்ட பல மணி நேர மீட்பு நடவடிக்கையின் மூலம் மாணவி பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த 23 வயதான கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காப்பற்றாட்ட மாணவி மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Font size:
Print
Related Posts
