அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கும் அக்கறைப்பற்று விவசாயிகள்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று கிழக்கு கமநல சேவைகளின் மத்திய நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்கை மேற்கொள்ளப்பட்ட நெல்லினை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதன்படி, 10,800 ஏக்கரில் பெரும்போக நெற்செய்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. எனினும் தொடர்ச்சியாக பெய்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட ஏக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட காரணத்தினால் நெல் கொள்வனவு செய்ய யாரும் முன்வரவில்லை. இதனால் பாதிக்கப்பட்டு நிற்கும் எங்களுக்கு என்ன பதில்? இதனால் தாங்கள் அதிகளவு நட்டத்தினை எதிர்நோக்கியுள்ளோம். இதனை விற்பனை செய்ய வியாபாரிகள் முன்வர வேண்டும். இல்லையெனில், அரசாங்கம் தான் இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும், இந்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நெற்களை இயந்திரங்களால் அறுவடை செய்யவும் கடினமாக உள்ளது. இதற்கான தீர்வினை அரசாங்கம் தான் பெற்றுத்தர வேண்டும் என்று விவசாயிகள் விசனம் தெரிவித்துள்ளனர். (P)

Related Posts