தனுஷுடன் நடிக்க மீண்டும் ஆசை! நடக்குமா? நடிகை ஓபன் டாக்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவர் தனுஷ். நடிகராக இருந்து இயக்குநராக உயர்ந்த தனுஷ் இயக்கத்தில் தற்போது இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், திருடா திருடி படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயா சிங் 20 வருடங்கள் கழித்து திருடா திருடி திரைப்பட சூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது குறித்து பகிர்ந்துள்ளார். அவர் கூறியது, மன்மத ராசா பாடலை சூட்டிங் செய்யும் போது எனக்கு கடும் காய்ச்சல் அதனால், அந்த பாடல் எப்படி வரும் என்ற பயம் இருந்தது. படம் வெளிவந்த போது நான் தமிழகத்தில் இல்லை வெளியூரில் இருந்தேன். அப்போது இயக்குநர் தான் எனக்கு போன் செய்து அந்த பாடல் மாபெரும் ஹிட் ஆனது என்று கூறினார். திருடா திருடி இரண்டாவது பாகம் எடுத்தால் கண்டிப்பாக நான் அதில் நடிப்பேன்.ஆனால் தற்போது தனுஷ் பெரிய அளவில் வளர்ந்து விட்டார். அவர் மீண்டும் இது போன்ற ஒரு படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts