நடிகர் கமல் ஹாசன் கடந்த சில மாதங்களுக்கு முன் AI தொழில்நுட்பத்தை படிப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார். AI படிப்பது மட்டுமின்றி அன்பறிவு இயக்கத்தில் தான் நடிக்கும் படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளிலும் ஈடுபட்டு இருந்ததாக சொல்லப்பட்டது.இந்த நிலையில் அமெரிக்காவில் AI தொழில்நுட்பத்தை படித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் கமல் ஹாசன். விமான நிலையத்தில் வந்த கமல், பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, தனது தக் லைஃப் படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகிறது என்று கூறினார்.மேலும், விக்ரம் 2 வருமா என பத்திரிகையாளர் கேள்வி கேட்க இல்ல இல்ல வேற ஸ்கிரிப்ட் எழுதி வந்துட்டு இருக்கேன் என கூறினார். இந்த வயதிலும் சினிமாவில் ஆர்வம் குறையாமல் நடிக்கவும், இயக்கவும் கூடவே தொழில் நுட்பத்தை கற்கவும் அமெரிக்கா வரை சென்றுள்ளார். அதுமட்டுமா? அரசியலில் வேற தீவிரமாக உள்ளார். எல்லா இடத்திலும் முன்னணியில் ஆர்வம் குறையாமல் இருக்கும் இவரது உழைப்பு இந்த காலத்து தலைமுறையினருக்கு முன் உதாரணம்.