Font size:
Print
பெப்ரவரி மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை திருத்தத்திற்கு நிதி அமைச்சின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விலை திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிதி அமைச்சகத்தின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தை எரிவாயு விலைக்கேற்ப நாட்டின் எரிவாயு விலைகள் மாதந்தோறும் திருத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 4 ஆம் திகதி அறிவிக்கப்படும் இருப்பினும், பெப்ரவரி மாதத்திற்கான எரிவாயு விலை திருத்தம் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்த போதிலும், மக்களை கருத்திற்கொண்டு கடந்த சில மாதங்களாக, எரிவாயு விலையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென லிட்ரோ நிறுவனம் அறிவித்தது.(P)
Related Posts