இஸ்ரேல் தாக்குதல்: அல் ஜசீரா ஊடகவியலாளர் பலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காசாவில் இஸ்ரேலியப் படைகள் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில், அல் ஜசீரா (Al Jazeera Mubasher) நிறுவனத்தின் ஊடகவியலாளர் முகமது விஷா (Mohammed Wishah) கொல்லப்பட்டுள்ளார்.

மேற்கு காசா நகரில் நடைபெற்ற இந்த தாக்குதலில், இஸ்ரேலிய ஆளில்லா வானூர்தி ஏவுகணை தாக்குதலால் அவர் இலக்கு வைக்கப்பட்டதாக மருத்துவ ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

  இந்த சம்பவம் குறித்து விரிவான தகவல்களை அல் ஜசீரா நிறுவனம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

  போர்ப்பரப்பில் பணியாற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது.  


 

Related Posts