பிரான்சில் நடைபெற்றுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் பிலால் லுக்மான் நகராட்சி உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் இளம் வயது மக்கள் பிரதிநிதிகளில் ஒருவராக இவர் சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ் புறநகர் பகுதியில் பிறந்த பிலால், இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர். அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில், தற்போதைய மேயரின் அணியில் போட்டியிட்டு இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.
தற்போது 'பாரிஸ்-பாந்தியன்-அசாஸ்' பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை முதலாம் ஆண்டு மாணவராகப் பயின்று வருகிறார். ,தனது 18ஆவது வயதிலேயே வாக்காளராகவும் வேட்பாளராகவும் ஒரே தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.
இளம் வயதிலிருந்தே அரசியல் மற்றும் பொது சேவைகளில் ஈடுபாடு காட்டி வந்த பிலால் லுக்மான், பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாக அலுவலகங்களில் பயிற்சியும் பெற்றுள்ளார்.
தனது வெற்றியைத் தொடர்ந்து,தனது வெற்றி குறித்து பிலால் லுக்மான்,
"நாம் எங்கிருந்து வந்தோம் அல்லது எந்தப் பாதையில் வந்தோம் என்பது முக்கியமல்ல. நாம் இணைந்து எதைக் கட்டியெழுப்பப் போகிறோம் என்பதே முக்கியம். அரசியல் என்பது அர்த்தமற்றது என்று நினைப்பதை மக்கள் நிறுத்த வேண்டும்."
தனது கல்விப் பணிகளுக்கு மத்தியில், புதிய அரசியல் பொறுப்புகளையும் சமநிலைப்படுத்தி, இளைஞர்களை அரசியலில் அதிகளவில் ஈடுபட ஊக்குவிப்பதே தனது நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்.
Font size:
Print
Related Posts
