அமைதி திரும்புமா? – பாகிஸ்தான் பிரதமர் நம்பிக்கை

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க முக்கியமான அமைதி பேச்சுவார்த்தைகள் தற்போது  இஸ்லாமாபாத்  நகரில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், இரு தரப்பினரும் ஆக்கபூர்வமான முறையில் ஈடுபடுவது வரவேற்கத்தக்கது என்றும், இது பிராந்தியத்தில் நிலையான அமைதிக்கான முக்கிய படியாக அமையும் என்றும்  பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான நீடித்த பதற்றத்தை குறைத்து, நிலையான அமைதியை ஏற்படுத்துவதே இந்த பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகக் கருதப்படுகிறது.

மத்திய கிழக்கில் நீடித்து வரும் பதற்ற சூழ்நிலையில், இந்த பேச்சுவார்த்தைகள் முக்கிய திருப்புமுனையாக அமையுமா என்பது குறித்து உலக நாடுகள் கவனமாகக் கண்காணித்து வருகின்றன.

Related Posts