இந்தியாவின் பீகார் மாநிலத்தில் இடம்பெற்ற கொடூர சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
கதிஹார் மாவட்டத்தின் கெரபாரி கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று, எதிரே வந்த வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்ததாகவும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் மேலும் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பயணிகள் கூறுகையில், பேருந்து ஓட்டுநர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Font size:
Print
Related Posts
