அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய அமைதி பேச்சுவார்த்தை ஏன் தோல்வி அடைந்தது என்பது குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி J. D. வான்ஸ் முக்கிய விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த போதிலும், எந்தவித ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
இதுகுறித்து வான்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இரு தரப்புக்கும் இடையே நல்ல அளவில் விவாதங்கள் நடந்தது நல்ல செய்தி. ஆனால், எந்த ஒப்பந்தமும் எட்டப்படாதது கெட்ட செய்தி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் முக்கிய இலக்கு, ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்காமல் தடுப்பதே எனவும், அதற்கான உறுதிப்பாடு ஈரான் தரப்பில் இருந்து கிடைக்கவில்லை எனவும் அமெரிக்க துணை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
“எங்களின் நிபந்தனைகளை ஏற்க ஈரான் மறுத்ததால், ஒப்பந்தம் எதுவும் இன்றி திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என்றும் வான்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
6 வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாகக் கருதப்பட்ட இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக சர்வதேச பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
இந்நிலையில், எதிர்காலத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்குமா அல்லது மோதல் தீவிரமாவதா என்பது குறித்து உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.
Font size:
Print
Related Posts
