அமெரிக்கா-ஈரான் ; பேச்சுவார்த்தை தோல்வி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முக்கிய அமைதி பேச்சுவார்த்தை எதிர்பாராத முறையில் முன்னேற்றமின்றி முடிவடைந்துள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், ஈரான் தரப்பை முகமது பாகர் காலிப்  தலைமையிலான குழுவும், அமெரிக்க தரப்பை துணை ஜனாதிபதி தலைமையிலான குழுவும் பிரதிநிதித்துவப்படுத்தின.

பாதுகாப்பு, அரசியல், ராணுவம், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளின் உயர்மட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்ட இந்த பேச்சுவார்த்தை, செரீனா ஹோட்டலில் நேற்று மதியம் தொடங்கி, இன்று அதிகாலை வரை சுமார் 15 மணிநேரம் நீடித்தது.

பேச்சுவார்த்தைக்கு முன்பு, ஈரான் தரப்பு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், பின்னர் அமெரிக்க குழுவுடன் நேரடி பேச்சு நடத்தப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையின் போது, இரு தரப்பினரும் தங்களது நிபந்தனைகளை எழுத்து வடிவில் பரிமாறிக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், “அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தைகள் எப்போதும் நம்பிக்கையின்றி முடிகின்றன” என ஈரான் தரப்பு கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது.

மேலும், அமெரிக்க ஜனாதிபதி, “ஈரான் ஏமாற்ற முயன்றால் கடும் பதிலடி இருக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

6 வாரங்களாக நீடித்து வரும் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முதல் முயற்சியாக பார்க்கப்பட்ட இந்த சந்திப்பு, எந்த உறுதியான முடிவும் இல்லாமல் முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறுமா அல்லது பதற்றம் மேலும் அதிகரிக்குமா என்பது குறித்து உலக நாடுகள் கவனமாக கண்காணித்து வருகின்றன.

Related Posts