இரண்டு அமெரிக்க கடற்படை ஏவுகணைத் தகர்ப்புக் கப்பல்கள் இன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், குறிப்பாக கடலில் பதிக்கப்பட்டிருக்கக்கூடிய கண்ணிவெடிகள் இல்லாத பாதுகாப்பான வழித்தடத்தை உருவாக்குவதற்கும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
அந்த இரண்டு போர்க்கப்பல்களின் பெயர்களை யுஎஸ்எஸ் ஃபிராங்க் ஈ பீட்டர்சன் மற்றும் யுஎஸ்எஸ் மைக்கேல் மர்ஃபி என அது குறிப்பிடுகிறது.
மேலும், அமெரிக்க மத்திய கட்டளை தளபதி வெளியிட்ட அறிக்கையில், “வர்த்தக கப்பல்கள் தடையின்றி செல்லும் வகையில் புதிய பாதுகாப்பான கடல் வழித்தடம் உருவாக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
உலக எண்ணெய் வர்த்தகத்திற்கு முக்கியமான இந்த ஹோர்முஸ் நீரிணையில், இந்த நடவடிக்கை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த சூழலில், மத்திய கிழக்கில் பதற்றம் குறையுமா அல்லது மேலும் அதிகரிக்குமா என்பது குறித்து உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
Font size:
Print
Related Posts
