பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே அவர்கள் 92 வயதில் காலமானார்.
மும்பையில் வசித்து வந்த அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பை தொடர்ந்து, தென் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சுவாச பிரச்சினை காரணமாக செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்ட நிலையில் இருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர் ஆஷா போஸ்லே.
இந்தி, தமிழ் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
தமிழில் ‘செண்பகமே’, ‘நீ பார்த்த பார்வை’, ‘செப்டம்பர் மாதம்’, ‘கொஞ்சநேரம்’ போன்ற பல மறக்க முடியாத பாடல்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.
இந்திய அரசின் உயரிய விருதான பத்ம விபூஷண் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அவர் மறைந்த புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கரின் அவர்களின் சகோதரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆஷா போஸ்லே அவர்களின் மறைவு, இந்திய இசை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுகிறது.
அவரது இறுதிச் சடங்குகள் மும்பையில் நடைபெறவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
