புயல் பேரழிவு! 5 பேர் பலி – 90 விமானங்கள் ரத்து

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நியூசிலாந்து நாட்டில் கடுமையான புயல் தாக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு தீவை தாக்கிய இந்த வையாணு புயல், மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன், கனமழையையும் ஏற்படுத்தியுள்ளது.

வார்க்வோர்த் பகுதியில் உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து, வீடுகள் மற்றும் சாலைகளுக்குள் நீர் புகுந்துள்ளது.

வக்காட்டேன் பகுதியில் மட்டும் 270 வீடுகளில் இருந்த சுமார் 2,500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும், ஆயிரக்கணக்கான வீடுகள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றன.

இந்த பேரிடர் காரணமாக,  ஏர் நியூசிலாந்து நிறுவனம் 90 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.

பார் நார்த் மற்றும் பே ஆப் பிளெண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புயல் மற்றும் வெள்ளப் பேரழிவில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காணாமல் போயுள்ளனர்.

புயல் தெற்கு நோக்கி நகர்ந்து மேலும் பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த இயற்கை பேரிடர், அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Posts