கண்ணிவெடிகள் எங்கே? திணறும் ஈரான்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹார்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதையின் வழியாக சர்வதேச நாடுகளின் கப்பல்கள் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதால் எரிபொருள் வினியோகம் சற்று இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. 

இந்த நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் பொருத்திய கண்ணிவெடிகளைக் கண்டறிய அந்நாட்டு படைகளால் முடியவில்லை எனவும், அவை கடலின் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்முஸ் நீரிணை கடல்பகுதியில், கண்ணிவெடிகள் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாததால் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் நீடிக்கிறது. 

கடலுக்கு மேலே மிதந்த கண்ணிவெடிகளை ஈரான் ராணுவம் அகற்றியது. கடலுக்கு சில நூறு அடி ஆழத்தில் எங்கெல்லாம் கண்ணிவெடிகள் வீசப்பட்டன என்பது குறித்து தெளிவான விவரங்கள் இல்லாததால் சிரமம் ஏற்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட ராணுவ வரைபடத்தின்படி நடக்காமல், அவசர அவசரமாகச் செய்யப்பட்டதால், எந்தெந்த இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளன என்பதற்கான துல்லியமான தரவுகள் ஈரானிடம் இல்லாமல் போய்விட்டது. 

இந்நிலையில், கண்ணிவெடிகளை கண்டறிந்து அகற்றுவதற்கு தேவையான நவீன தொழில்நுட்ப வசதிகள் போதிய அளவில் இல்லாததும் ஈரானுக்கு பெரிய சவாலாக மாறியுள்ளது.

உலக எண்ணெய் வர்த்தகத்தின் முக்கிய நரம்பாக விளங்கும் இந்த ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் இந்த குழப்பம், சர்வதேச அளவில் கவலைக்குரியதாக பார்க்கப்படுகிறது.

Related Posts