கல்கிசை பகுதியில் பொதுவெளியில் குழப்பம் விளைவித்த உக்ரைன் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலரை தாக்கியதாக குற்றச்சாட்டு நிலவிய நிலையில், குறித்த பெண்ணை கல்கிசை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அவர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த பெண் நீண்ட காலமாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும், ஆனால் சட்டபூர்வமான கடவுச்சீட்டை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தியமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் திருட்டு ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அந்தப் 37 வயதான பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Font size:
Print
Related Posts
