திருத்தந்தை 14ஆம் லியோ குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட விமர்சனங்கள், சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ட்ரம்பின் இந்தச் செயலுக்கு இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தமது கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.
ட்ரம்ப்புடன் நெருக்கமான நட்புறவைக் கொண்டிருப்பதாகக் கருதப்படும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, மிகவும் அரிதான முறையில் ட்ரம்பிற்குப் பகிரங்கமாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "புனிதத் தந்தை குறித்து ஜனாதிபதி ட்ரம்ப் பயன்படுத்திய வார்த்தைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்து கொண்டு, அமைதிக்காகக் குரல் கொடுப்பதும் போரை எதிர்ப்பதும் திருத்தந்தையின் முறையான கடமையாகும்." என குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டு ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற ஒரேயொரு ஐரோப்பியத் தலைவராக மெலோனி கருதப்படுகிறார்.
ஆரம்பத்தில் திருத்தந்தைக்கு ஆதரவாக மட்டும் அறிக்கை வெளியிட்ட மெலோனி, தற்போது நேரடியாக ட்ரம்ப்பின் பெயரைச் சுட்டிக்காட்டி தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, ட்ரம்பின் கருததுக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தனது எக்ஸ் (X) தளத்தில் திருத்தந்தை மீதான அவமதிப்பைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்
"அமைதி மற்றும் சகோதரத்துவத்தின் தூதரான இயேசு நாதரை அவமதிப்பதை எந்தவொரு சுதந்திர மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஈரான் மக்கள் சார்பாக திருத்தந்தை மீதான இந்த விமர்சனத்தை நான் கண்டிக்கிறேன்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே ஈரான் போர் விவகாரத்தில் நிலவி வரும் கருத்து வேறுபாடுகள், தற்போது உலகத் தலைவர்களின் தலையீட்டால் ஒரு சர்வதேச இராஜதந்திர சிக்கலாக உருவெடுத்துள்ளது.
Font size:
Print
Related Posts
