’’ரணிலுக்கு மூளையில் பெரும் சேதம்’’

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பெராரி ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜெசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க, வெள்ளிக்கிழமை (07) பாராளுமன்றத்தில் கவலையான செய்தியாக குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிமை 2025 வரவு செலவுத் திட்டத்தில் போக்குவரத்து அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான விவாதத்தில் உரையாற்றும் போது, மிகவும் கவலையான செய்தியாக குறிப்பிட்டு குறித்த விடயத்தை தெரிவித்து விவாதத்தை ஆரம்பித்தார். அண்மையில் இடம்பெற்ற பெரிய வாகன விபத்தொன்று தொடர்பில் இங்கே அறிவிக்க வேண்டியுள்ளது. பெராரி ஓட்டுநர் உரிமம் இருப்பதாக கூறியவர் அல்ஜெசீராவுடன் மோதி சேதத்திற்கு உள்ளாகியுள்ளார். அவரின் மூளைக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது என்றார் (P)

Related Posts