16 பயங்கரவாதிகளை கொன்று 104 பயணிகளை மீட்ட பாதுகாப்பு படையினர்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ரெயிலை கடத்திய பயங்கரவாதிகளில் 16 பேரை இதுவரை கொன்றுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பயணிகளில் 104 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.முன்னதாக, பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறும் போது, "பாதுகாப்புப் படையினர் 104 பயணிகளை (58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள்) - ஒரு பெட்டியிலிருந்து மீட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.ரெயிலில் சுமார் 400 பயணிகள் இருந்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. பெஷாவர் செல்லும் பயணிகள் ரயிலில் தீவிர துப்பாக்கிச் சூடு நடந்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் மீட்புக் குழுக்கள் அனுப்பப்பி வைக்கப்பட்டுள்ளதாக ரிண்ட் கூறியுள்ளார். பாகிஸ்தானில் பயணிகள் ரெயில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணம், குவெட்டாவில் இருந்து கைபர் பதுன்கவா மாகாணத்தின் பெஷாவர் பகுதிக்கு சென்று கொண்டிருந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயிலை பயங்கரவாதிகள் வழிமறித்து கடத்தினர்.பாகிஸ்தானிடமிருந்து பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கோரும் பலுச் விடுதலை இராணுவம் (BLA) என்ற பிரிவினைவாத அமைப்பு இந்த கடத்தலை அரங்கேற்றியது. ரெயில் பிரு குன்றி மலைப்பகுதியின் அருகில் உள்ள சுரங்கப்பாதையில் சென்றுக் கொண்டிருந்த போது ஆயுதம் ஏந்திய நபர்கள் ரெயிலை வழிமறித்தனர்.

Related Posts