டிரம்ப் அறிவிப்புக்கு ஒன்ராறியோ முதல்வர் கொடுத்த பதிலடி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கனடா பொருள்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்புக்குப் பதிலடியாக, ஒன்ராறியோ மாகாணத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயாா்க், மிஷிகன், மினிசோட்டா மாகாணங்களுக்கு விநியோகிக்கப்படும் மின்சாரத்துக்கான கட்டணத்துடன் 25 சதவீத கூடுதல் கட்டணம் விதிக்கப்படுவதாக மாகாண முதல்வர் டக் ஃபோா்டு அறிவித்தாா். கனடா மீது அதிபா் டிரம்ப் விதிக்கும் கூடுதல் வரி அமெரிக்க பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். அந்த வரி விதிப்பு விலைவாசியை அதிகரித்து அமெரிக்க மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்தார். கனடாவின் இரும்பு, அலுமினியத்துக்கு 50 சதவீதம் என்ற மிகக் கடுமையான வரியை டிரம்ப் அறிவித்துள்ளதால், அவரது மிரட்டலுக்கு அடிபணியப் போவதில்லை என்று டக் ஃபோா்டு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.

Related Posts