சுனிதா வில்லியம்ஸ், வில்மோரை அழைத்து வர புறப்பட்டது விண்கலம்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்.) கடந்த வருடம் ஜூனில் ஆய்வு பணிக்காக பச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர். ஒரு வார காலம் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டு இருந்தது.ஆனால், பூமிக்கு திரும்ப முடியாமல் தொடர்ந்து அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி தவித்தனர். இந்நிலையில், 9 மாதங்களாக தவித்து வந்த அமெரிக்க விண்வெளி வீரர்களை பூமிக்கு அழைத்து வர ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா அமைப்பு இணைந்து ராக்கெட் ஒன்றை அனுப்பி உள்ளது. இதற்காக, டிராகன் விண்கலத்துடன் பால்கன் 9 ரக ராக்கெட் ஒன்று இன்று அதிகாலை புறப்பட்டு சென்றது. இந்த ராக்கெட் இன்றிரவு 11.30 மணியளவில் ஐ.எஸ்.எஸ்.-சுக்கு சென்றடைந்ததும், வருகிற 19-ந்தேதி வில்மோர் மற்றும் வில்லயம்ஸ் இருவரும் அந்த விண்கலத்தில் புறப்பட்டு பூமிக்கு திரும்புவார்கள்.அவர்களுடன் நாசா விஞ்ஞானி நிக் ஹேக் மற்றும் ரஷிய அலெக்சாண்டர் விஞ்ஞானி கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு திரும்புவார்கள். கடந்த செப்டம்பரில் அவர்கள் இருவரும், வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் திரும்ப அழைத்து வருவதற்காக காலியான 2 இருக்கைகளுடன் குரூ டிராகன் விண்கலத்தில் சென்றனர்.

Related Posts