மருத்துவமனையை தாக்கிய இஸ்ரேல் ஏவுகணை.. ஹமாஸ் தலைவர் மரணம்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

தெற்கு காசாவில் அமைந்துள்ள மருத்துவமனையை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இருவர்- ஹமாஸ் அமைப்பின் தலைவர் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனை ஹமாஸ் அமைப்பு மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.ஹமாஸ் அரசியல் அமைப்பை சேர்ந்த இஸ்மாயில் பர்ஹோம் நாசர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ஹமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆக்கிரமிப்பின் நீண்டகால பயங்கரவாதத்தை தொடரும் வகையில் உயிர்கள் மற்றும் மருத்துவ வசதிகளை அழிக்கும் இந்த குற்ற செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை புறக்கணித்து, மக்கள் மற்றும் தலைமைக்கு எதிராக திட்டமிட்ட படுகொலை செய்யும் தொடர்ச்சியான கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது," என தெரிவித்துள்ளது.முன்னதாக கடந்த டிசம்பர் 2023ம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூர தாக்குதல்களில் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று காசா சுகாதார துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts