Font size: 15px12px
Print
இலங்கையின்முன்னாள் மூன்று தளபதிகள் உட்பட நான்கு நபர்கள் மீது தடைகளை விதிக்க பிரிட்டன் எடுத்த முடிவு குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளியுறவு அமைச்சு அறிவிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். , முன்னாள் இராணுவத் தளபதிகள் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜெயசூர்யா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் கருணா அம்மான் என்றும் அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய நான்கு நபர்கள் மீது பிரிட்டன், திங்கட்கிழமை (24) தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது. (P)
Related Posts