பாலியல் ஊக்க மருந்துகள்: Health Canada வெளியிட்ட எச்சரிக்கை!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

​கனடா சுகாதாரத்துறை (Health Canada) அங்கீகரிக்கப்படாத பாலியல் ஊக்க மருந்துகள் குறித்து கனடா முழுவதும் விற்பனையில் உள்ள பல அங்கீகரிக்கப்படாத பாலியல் மேம்பாட்டு பொருட்கள் தீவிரமான ஆரோக்கியப் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரித்துள்ளது. பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பெர்டா, ஒன்டாரியோ, குய்பெக், மனிட்டோபா, நியூ பிரன்சுவிக் ஆகிய மாகாணங்களில் உள்ள கடைகளில் இப்பொருட்கள் விற்கப்படுகின்றன.​ கடந்த ஜூன் 13, 2024 முதல் இதுவரை 432 அங்கீகரிக்கப்படாத பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன, இதில் "Stiff Rox Honey," "Rhino 69 Platinum," "Spanish Fly" போன்றவை அடங்கும். இந்த பொருட்களில் அளவுக்கு மீறிய அல்லது விரும்பத்தகாத மருந்து சேர்மங்கள் இருக்கலாம், இது அலர்ஜி அல்லது தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். கனடா சுகாதாரத்துறை, நுகர்வோர் இந்த பொருட்களை தவிர்க்க வேண்டும் என்றும், ஏதேனும் உடல்நலக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக சுகாதார நிபுணர்களை அணுக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.

Related Posts