ஆயிரக்கணக்கை தாண்டிய இறப்பு எண்ணிக்கை: அலறும் மியான்மர், தாய்லாந்து!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

மியான்மரில் நேற்று காலை 11.30 மணி அளவில் மிகக் கடுமையாக 7.7 ரிக்டர் அளவில் ஏற்பட்டது. இதை உணர்ந்து தப்பிழைத்து மக்கள் ஓடுவதற்கு அடுத்த சில நிமிடங்களில் இரண்டாவதாக மற்றொரு நிலநடுக்கம் தாக்கியிருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்ந்த இந்தக் கடுமையான நிலநடுக்கத்தால் மியான்மரில் கார்கள் குலுங்கி, கட்டடங்கள் சீட்டுக் கட்டுகளைப் போல சரிந்து நூற்றுக்கணக்கானோர் அதில் சிக்கியுள்ளனர். அருகே தாய்லாந்திலும் இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி மிகப்பெரிய பொருட் சேதத்தையும், உயிர் சேதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி 1002 பேர் பலியாகியிருப்பதாகவும், 2,376 பேர் படுங்காயமடைந்து சிகிச்சைப் பெற்று வருதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மியான்மரின் தலைநகர் மாண்டலே, தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக வெளியாகும் காணொலிகள், புகைப்படங்கள் சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்னும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை என்றும் ஏராளமானவர்கள் கட்டட சரிவுகளில் சிக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் மீட்புப் படையினர் இரவும் பகலுமாக தீவர மீட்புப் பணியில் இறங்கியிருக்கின்றன. இதற்கிடையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமெரிக்காவின் புவியில் ஆராய்ச்சி நிறுவனம் (யூ.எஸ்.ஜி.எஸ்), "மியான்மர் நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். இதன் பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தைக் கடக்கலாம்" என்று தெரிவிப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Posts