மாட்டு சாணத்தை பல கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யும் இந்தியா!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மாட்டு சாணம் ஏற்றுமதி வேகமாக அதிகரித்துள்ளது. பல நாடுகளுக்கு இந்திய மாட்டு சாணம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நாடுகள் பசுவின் சாணத்தை பல வழிகளில் பயன்படுத்துகின்றன. உலக அளவில் மாட்டு சாணத்தின் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிக கால்நடைகள் கொண்ட நாடாக இந்தியா இருக்கும் நிலையில், மற்ற நாடுகளுக்கு மாட்டு சாணத்தை ஏற்றுமதி செய்து வருகிறது. இது குறித்து வணிக ஆலோசகர் சர்தக் அஹுஜா கூறுகையில், "உலகில் பசுவின் சாணத்திற்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இந்தியர்கள் ரூ.400 கோடி மதிப்புள்ள பசுவின் சாணத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். மேற்கு ஆசிய நாடுகளில், பனை மரங்களை வளர்க்க பசுவின் சாண பொடி பயன்படுவதாக கூறப்படுகிறது.இந்தியாவிலேயே மாட்டு சாணம் பலவிதமாகப் பயன்படுகிறது. விவசாயத்தில் உரமாக இடப்படுகிறது. எரிபொருளாக பயன்படுவது மட்டுமின்றி, இயற்கை எரிவாயு தயாரிக்கவும் மாட்டுச் சாணம் பயன்படுகிறது. சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத பல பொருள்களைத் தயாரிக்க மாட்டுச்சாணம் பயன்படுத்தப்படுகிறது.

Related Posts