உலக சாதனை படைத்த எலி

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கம்போடியாவில் கண்ணிவெடிகளை இனங்காண்பதற்காக ஈடுபடுத்தப்பட்ட எலி புதிய உலக சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரொனின் என அழைக்கப்படும் அந்த எலி 100க்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகளை மோப்பம் பிடித்து சாதனை படைத்துள்ளது. ஆப்பிரிக்க ராட்சத எலியான ரொனின் 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை 109 கண்ணிவெடிகளை மற்றும் 15 வெடிக்காத வெடிமருந்துகளைக் கண்டுபிடித்துள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு கம்போடியாவில் மில்லியன் கணக்கான வெடிக்காத வெடிமருந்துகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அன்றாட வாழ்க்கையில் அடுத்த நொடி நிச்சயமற்றது என்ற அச்சத்துடன் வாழ வேண்டியிருந்த மக்களுக்கு ரொனின் ஒரு முக்கிய பணியை செய்துள்ளதாக கூறப்படுகின்றது. மேலும், ரோனினின் அற்புதமான பணி, 71 கண்ணிவெடிகளை மோப்பம் பிடித்து 2020 ஆம் ஆண்டில் தங்கப் பதக்கம் பெற்ற மகாவா என்ற எலியின் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. அதேநேரம், கம்போடியாவில் இன்னும் நான்கு முதல் ஆறு மில்லியன் கண்ணிவெடிகள் மற்றும் வெடித்த பிற வெடிமருந்துகள் புதைக்கப்பட்டிருப்பதாக நிலக்கண்ணிவெடி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 

Related Posts