Font size: 15px12px
Print
நடிகை ரேஷ்மாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா ரோல் உட்பட பல சீரியல்களில் அவர் நடித்து வருகிறார். 2016ல் விஷ்ணு விஷால் நடித்த வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா என்ற ரோலில் ரேஷ்மா நடித்து இருந்தார். அதில் புஷ்பா புருஷன் காமெடி தான் பெரிய ஹிட் ஆனது.அந்த படத்திற்கு பிறகு தனக்கு வந்த பட வாய்ப்புகள் எல்லாம் அதே சாயலில் இருந்தது. ரெக்கார்ட் டான்ஸ் ஆடும் பெண்ணாக தான் நடிக்க கேட்டார்கள், அதனால் சினிமாவே வேண்டாம் என கூறிவிட்டு டிவி சீரியல்கள் பக்கம் சென்றுவிட்டேன் என ரேஷ்மா கூறி இருக்கிறார். தான் நடித்த ரோல் ஹிட் ஆனாலும், அதன் பிறகு படங்களே வேண்டாம் என நடிகை எடுத்த முடிவு எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
Related Posts