மு.க. ஸ்டாலின் தோல்வி; தி.மு.க. நிர்வாகி மரணம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகேயுள்ள கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்தபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் உயிரிழந்துள்ளார்.

கத்தாழை கிராமத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பன்னீர்செல்வம் என்பவர் தி.மு.க.வின் கிளை செயலாளராகவும், நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஊழியராகவும் பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி பழனியம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த பன்னீர்செல்வம், சட்டமன்ற தேர்தல் முடிவுகளை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தபோது, தி.மு.க. கூட்டணி 74 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதையும், மு.க. ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்ததையும் கண்டுள்ளார்.

இந்த முடிவுகளால் அதிர்ச்சியடைந்த குறித்த நபர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உடனடியாக அவரை குடும்பத்தினர் சேத்தியாத்தோப்பு குறுக்கு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்