விஜயின் வெற்றியின் ரகசியம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சியின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்வென்று சிந்தித்திருக்கின்றீர்களா?

இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணடும் உளவியல் உண்மைகளும் இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் இது குறித்து விரிவாக விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.

உண்மையில் தமிழக வெற்றி கழகம் மாத்திரமன்றி, kfc,மெக்டொனால்ட்ஸ் (McDonald's)போன்ற பிரபல நிறுவனங்கள் கூட இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தின் இணைப்பை தேர்வு செய்துள்ளது.

இதற்கு முக்கிய காரணம் மக்களின் உளவியலலோடு நெருங்கிய தொடர்பை இந்த நிறங்களின் சேர்க்கையானது எளிதில் உவாக்குகின்றது.

சிவப்பு நிறம் மக்களின் உணர்வுகளை தூண்டக்கூடிய ஒரு நிறமாகவும், ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தக்கூடிய நிறமாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.


குறிப்பாக மனிதர்களின் உளவியல் அடிப்படையில் சிவப்பு நிறம் உணர்வுகளையும் பசியையும் தூண்டக்கூடியது. இதனால் தான் ஏராளமான உணவு உற்பத்தி நிறுவனங்கள் விளம்பரத்தில் இந்த நிறத்தை அதிகம் பயன்படுத்துகின்றன.

அது மாத்திரமன்றி மஞ்சள் நிறம் நமது மகிழ்சியுணர்வை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் நட்பு, ஈடுபாடு, நம்பிக்கையுணர்வு என நிறுவனத்துடன் அல்லது கட்சியுடன் ஒரு ஆத்தமார்தமான பிணைப்பை உருவாக்க துணைப்புரிகின்றது.

இந்த இரண்டு நிறங்கள் சேரும் போது, உணர்வு ரீதியான ஒரு பிணைப்பு தானாகவே உருவாகின்றது என உளவியல் நிபுணர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து நின்றும் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.      

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி