பாலியல் அத்துமீறல்: த.வெ.க. நிர்வாகி கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னை காசிமேடு பகுதியில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த த.வெ.க. நிர்வாகியை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சென்னை மயிலாப்பூர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். 

கடந்த 23ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த த.வெ.க. வட்டச் செயலாளர் தினேஷை என்கிற பாம்பு தினேஷ் என்பவர் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் அத்துமீறலை ஈடுபட்டுள்ளார். 

இதனை வெளியில் சொன்னால் கழுத்தை நெரித்து கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.

இதனால், மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமையை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டுக்கு சென்று சித்தியிடம் கூறியுள்ளார். 

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் கடந்த 4ஆம் தேதி போக்சோ வழக்கை பதிவு செய்து தினேஷை கைது செய்ய முயன்றுள்ளனர். 

ஆனால் தினேஷ் ஆர்.கே.நகர் தொகுதி த.வெ.க. சார்பில் போட்டியிட்ட மரிய வில்சனுக்கு ஆதரவாக வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று இருந்தததால் கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. 

இதனை தொடர்ந்து நேற்று இரவு தினேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட தினேஷ் சென்னை 43-வது வார்டு த.வெ.க. வட்டச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி